Monday, August 30, 2021

அ...ஆஹா

அன்பின் அலையிலே ஆடல்

ஆடலின் ஆழத்திலே இன்பம்

இன்பத்தின் இதழிலே ஈரம்

ஈரத்தின் ஈறிலே உண்மை

உண்மையின் உருகலிலே ஊமை

ஊமையின் ஊக்கத்திலே எண்ணம்

எண்ணத்தின் எதிரொலியிலே ஏக்கம்

ஏக்கத்தின் ஏயலே ஐயம்

ஐயத்தின் ஐம்புறத்திலே ஒளி

ஒளியின் ஒய்யாரத்திலே ஓவியம்

ஓவியத்தின் ஓதுதலிலே ஔவியம்

ஔவியத்தின் ஔடத்திலே அன்பு!